சுற்றுலாத் துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு


சுற்றுலாத் துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு
x
தினத்தந்தி 25 Oct 2021 9:35 AM IST (Updated: 25 Oct 2021 9:35 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை சுற்றியுள்ள டாஸ்மாக்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை, பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார், அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலைதடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம். 

பராமரிப்பில்லாத திருக்கோவில்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. சுற்றுலாத் துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கோவில்களை சுற்றி இருக்கக் கூடிய டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

Next Story