நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்- அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு


நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்- அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2021 9:54 PM IST (Updated: 17 Nov 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல  நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது  தொடர்பாக,  அர்ஜூன் சம்பத் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- 'இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 7-ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் 'திரைப்பட நடிகர், விஜய் சேதுபதி, தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார். 

இந்தப் பதிவு அமைதி மீறுதலை தூண்டும் வகையிலும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.எனவே, இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடைவீதி போலீஸார் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்ற அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,'' எனக் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story