புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:27 PM (Updated: 17 Nov 2021 4:27 PM)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புதுச்சேரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச 23-வது மாநாடு பாக்குமுடையான்பட்டு பார்வதி திருமண நிலையத்தில் நடந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சுதா சுந்தரராமன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், பெருமாள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்கள். பிரதேச செயலாளர் ராஜாங்கம் மாநாட்டு அறிக்கையை தாக்கல் செய்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*புதுவை யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்டு வந்த 90 சதவீதம் மானியத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 30 சதவீதம் நிதி என்று இருந்து தற்போது 10 சதவீதத்துக்கும் கீழாக கிடைக்கிறது. நிதி வருவாயை பெருக்கிக்கொள்ள முடியாமலும் மாநில அந்தஸ்து கிடைக்காமலும் புதுச்சேரி தவித்து வருகிறது. மாநில அந்தஸ்து பெற்றால்தான் சுயேச்சையான தொழிற்கொள்கை மூலம் புதுச்சேரி மாநிலம் தொழில் வளர்ச்சி அடைய முடியும். மாநிலம் என்ற வகையில் மத்திய அரசிடமிருந்து நமக்குரிய வரி வருவாய் பங்கினை பெற முடியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூடுதல் நிதியையும் பெற முடியும்.
*எனவே புதுச்சேரி மாநிலத்துக்குரிய கடன்களை தள்ளுபடி செய்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இனியும் தாமதம் செய்யாமல் உண்மையான மக்களாட்சி புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துக்கு முழு அதிகாரம் கிடைத்திட புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 More update

Next Story