பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்


பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2021 10:11 AM IST (Updated: 21 Nov 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த  பிளஸ் 2 மாணவி, பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதாஞ்சலி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story