மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்: சென்னை பேராசிரியர் கைது


மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்: சென்னை பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 2:33 PM IST (Updated: 1 Dec 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி 2 நாட்களாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் ஆங்கில  பேராசிரியர் தமிழ்ச்செல்வன். இவர் அந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதை அடுத்து அந்த மாணவிக்கு , பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. 

இதை தொடர்ந்து பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி, 2 நாட்களாக, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் புகாருக்குள்ளான பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யபட்டு உள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளிலும், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.தற்போது  பேராசிரியர் தமிழ்ச்செல்வனிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story