பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையில் இரசாயனம் கலப்பா.? - ஆய்வுக்கு உத்தரவு


பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையில் இரசாயனம் கலப்பா.? - ஆய்வுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2021 3:49 PM IST (Updated: 1 Dec 2021 3:49 PM IST)
t-max-icont-min-icon

பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையில் இரசாயனம் கலக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த உணவுப்பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி போன்றவற்றில் இரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இயற்கைப் பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் ஆகியவற்றில் இரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து, தமிழக அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Next Story