முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி வெடிகுண்டு வீசியதாக 6 சிறுவர்கள் கைது


முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி  வெடிகுண்டு வீசியதாக 6 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 9:39 PM IST (Updated: 1 Dec 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி வெடிகுண்டு வீசியதாக 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்
புதுவையில் முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி வெடிகுண்டு வீசியதாக 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டுகள் வீச்சு

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 26) பிளம்பர். இவரது உறவினர் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த போது கார் மீது மோதியதில் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்து அங்கு வந்த மகேந்திரனுக்கும், மணவெளி பகுதியை சேர்ந்த சிவா (60) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்து நேற்று  இரவு மோட்டார் சைக்கிளில் சிலர் மகேந்திரனின் வீட்டுக்கு வந்து அவரது தம்பி மகேசை (24) தாக்கியதுடன் மிரட்டும் வகையில் வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

இரவோடு இரவாக கைது

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து விசாரித்து இரவோடு இரவாக 6 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் 17 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். 
போலீஸ் விசாரணையில், சிவாவுடன் தகராறு செய்தவர்களை  மிரட்டுவதற்காக நாட்டு வெடி குண்டுகளை வீசியதாகவும் அதனை அவர்கள் தயாரித்ததாகவும் தெரிவித்தனர். அதில் ஒருவர் பிரபல ரவுடியின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story