கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கொலை


கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கொலை
x
தினத்தந்தி 1 Dec 2021 9:52 PM IST (Updated: 1 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருபட்டினத்தில், கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால்
திருபட்டினத்தில், கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண் கல்லை போட்டு  கொடூரமாக கொலை   செய்யப்பட்டார்.

நிலப்பிரச்சினை

காரைக்காலை   அடுத்த திருபட்டினம் வெள்ளக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் அன்னலட்சுமி (வயது48). இவரது கணவர் பாஸ்கரன்.  திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே கணவர் பிரிந்து சென்றதால் வீட்டு வேலை செய்து   அன்னலட்சுமி பிழைப்பு நடத்தி வந்தார்.
இ்ந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,   அன்னலட்சுமிக்கும் நிலம்  தொடர்பாக  பிரச்சினை  இருந்து  வந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில், இன்று காலை தனது வீட்டு வாசலில் தலையில் கல்லைப் போட்டு அன்னலட்சுமி கொலை செய்யப்பட்டு     கிடந்தார்.  இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்ததன்பேரில் மாவட்ட போலீஸ்       சூப்பிரண்டு நிகாரிக்காபட்,    போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரன்    மற்றும்   போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தடயங்கள் சிக்கின

தொடர்ந்து   போலீசார் நடத்திய விசாரணையில், தனியாக வசித்து வந்த அன்னலட்சுமியை   நள்ளிரவில் யாரோ தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு   தப்பிச்   சென்றது தெரியவந்தது.  சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்த போலீசார்  குற்ற வாளியை விரைவில்  பிடித்து விடுவோம் என தெரிவித்தனர்.  சந்தேகத்தின்  பேரில், நிலம் தொடர்பாக அன்னலட்சுமியுடன் தகராறு செய்தவரை பிடித்தும் போலீசார் விசாரித்தனர்.
கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்ட    சம்பவம் அங்கு  பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story