மாநில செய்திகள்

இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது + "||" + Man arrested for engaging young girls in prostitution

இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
புதுவையில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது செய்யப்பட்டார்
புதுச்சேரி 45 அடி ரோட்டில் சுதந்திர பொன்விழா நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். 
அப்போது அங்கு 2 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ரெட்டியார்பாளையம் தபால் நிலைய வீதியைச் சேர்ந்த அந்தோணி (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.