மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு + "||" + The AIADMK in the I-Court should order the conduct of the urban local government elections honestly. Case

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக, நேர்மையாகவும் நடத்த, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை,

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்தநிலையில், 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக்கோரி அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விதிமீறல்

ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி அ.தி.மு.க. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த ஐகோர்ட்டில், வழக்கும் தொடரப்பட்டது. அதன் விளைவாக, அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை இந்த ஐகோர்ட்டு பிறப்பித்தது. அப்படியிருந்தும், பல்வேறு விதிமீறல்கள் நடந்தது.

தி.மு.க.வினரை வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நிர்பந்தம் செய்தனர்.

கவர்னரிடம் புகார்

இந்த விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி கவர்னரிடம். அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜனவரி 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாது என கருதி கடந்த மாதம் 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,

துணை ராணுவம்

தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்,

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., 2006-ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னையில் மிகப்பெரிய வன்முறை நடைபெற்றது.

நியாயமான தேர்தல்

எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இயக்குனர் சுசி கணேசன் வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பாடகி சின்மயிக்கும் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
2. நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு
நடிகர் சித்தார்த் மீதுந டவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
3. 23 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த ஏழுமலையான் கோவில் வழக்கு
23 ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என கோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது.
4. அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தை தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.