தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டத்தையும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். அதன்படி அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஜனவரி மாதம் 9-ந்தேதி அன்று ஒரு சேர நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் நேற்று நடைபெற்றது.
தற்காலிக அவைத் தலைவர்
அ.தி.மு.க. அவைத் தலைவர் தலைமையில் தான் செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது அக்கட்சியின் சட்டத்திட்ட விதிமுறைகள் ஆகும். ஆனால் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவால் அப்பதவி காலியாக இருந்தது. இந்தநிலையில் செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கூடியது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டம் மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.
11 தீர்மானங்கள்
சென்னையில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்கட்சி பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அதன் தாக்கம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே இந்த கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் நேற்றைய கூட்டம் காரசார விவாதங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் வாசித்தார்.
அ.தி.மு.க. பொன் விழா கொண்டாட்டம்
அதன் விவரம் வருமாறு:-
* மக்களால், மக்களுக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு பொன் விழாவை நாடெங்கும், நகரமெங்கும், சிற்றூர் எங்கும் சீரும், சிறப்புமாக நடத்தி, அ.தி.மு.க. கொடியேற்றி கட்சி அலுவலகங்களை சீர்பெற செய்து கட்சிக்காக உழைத்தோரை கவுரப்படுத்தி கொண்டாடி மகிழ செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
* சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களையும், கூட்டணி கட்சிகள் 9 இடங்களையும் ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், உடன் உழைத்த பல்வேறு இயக்கங்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் செயற்குழு தனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
போராட்ட எச்சரிக்கை
* நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க.வின் நேர்மையற்ற பிரசார முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பிறகும் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்க மறுக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எந்த கால அட்டவணையில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பற்றி தி.மு.க. அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விரைவில் அத்தகைய கால அட்டவணையை வெளியிடாவிட்டால் மக்களை திரட்டி மாநிலம் தழுவிய போராட்டங்களை அ.தி.மு.க. நடத்தும் என்று இந்த செயற்குழு எச்சரிக்கிறது.
*தி.மு.க. ஆட்சி என்றால் அது அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அலங்கோலப்படுத்தும் காலகட்டம் என்பது வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட உண்மை. எனவே சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் அக்கறை காட்டாத தி.மு.க. அரசுக்கு இந்த செயற்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தி.மு.க. அரசுக்கு கண்டனம்
* ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை தி.மு.க. அரசு செய்ய தவறிவிட்டதை தமிழ்நாட்டு மக்கள் படும் துன்பமும், துயரமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாத்திருக்கும் தி.மு.க. அரசை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
* மழை-வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க.வினரை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
* நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க.வுக்கு இந்த செயற்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
வெற்றி பெற உழைப்போம்
* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் அ.தி.மு.க.வை கட்டிக்காத்து ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம். இனி வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும் அவை அனைத்திலும் வெற்றி பெற உழைப்போம். நாளை நமதே. மேற்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில், மரணமடைந்த அவைத் தலைவர் இ.மதுசூதனன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, மாமியார் வள்ளியம்மாள், சகோதரர் ஓ.பாலமுருகன், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி அருகே ரவுடிகளால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், முன்னாள் அவைத் தலைவர் புலமைப்பித்தன், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மதுரை ஆதீனம், நடிகர் விவேக், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், ‘தினமலர்’ முன்னாள் பத்திரிகை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி உள்பட 354 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story