ஒமைக்ரான் வைரஸ்: பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதனால், பிற உருமாறிய கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை. கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று ஏற்பாட்டுள்ளபோதும் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை.
இஸ்ரேல் உள்பட 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவச ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story