ரூ.5 கோடி மோசடி செய்த ஆசிரியை கைது
ரூ.5 கோடி மோசடி செய்த ஆசிரியை கைது.
வேலூர்,
வேலூர் அடுத்த கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் மகேஸ்வரி (வயது 53). இவர் தனது கணவரான ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் (59) மற்றும் தோட்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லதா (55) ஆகிய 3 பேர் அதிக வட்டி தருவதாக கூறி 3 பெண் களிடம் ரூ.5 கோடி வரை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 3 பெண்களும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகேஸ்வரி, தர்மலிங்கம், லதா மற்றும் உடந்தையாக இருந்ததாக மகேஸ்வரியின் மகள்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மற்றொரு ஆசிரியை மற்றும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story