2 பேருக்கு ஒமைக்ரான் - கர்நாடக, தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


2 பேருக்கு ஒமைக்ரான் - கர்நாடக, தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 3 Dec 2021 4:41 PM IST (Updated: 3 Dec 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கர்நாடக- தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒசூர், 

உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ இந்தியாவுக்குள் நுழைந்தது. கர்நாடகத்தில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு இருக்கிறது. 

 பாதிப்புக்கு ஆளாகியுள்ள 66 வயது ஆண் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். 46 வயதானவர், பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்.  பெங்களூருவை சேர்ந்தவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 22-ந் தேதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முதலில் வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொண்டவர், கொரோனா உறுதியானவுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டாக்டர் எனவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கர்நாடக- தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்  இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெப்ப நிலை, ஆக்சிஜன் நிலையை பரிசோதித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. 


Next Story