சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 3 Dec 2021 2:53 PM GMT (Updated: 3 Dec 2021 2:54 PM GMT)

ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றின் தன்மை குறித்து மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5 நாட்களில் அதன் முடிவுகள் வரும். ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார்


Next Story