சென்னையில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்து 128 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 128 பேருக்கு கொரோனா இன்று உறுதியாகியுள்ளது. சென்னையில் நேற்று கொரோனா ஒருநாள் பாதிப்பு 123 ஆக இருந்தது. இந்த நிலையில், எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,58,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 1170 ஆக உள்ளது.
சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையை தவிர 36 மாவட்டங்களில் 583 பேருக்கு பாதிப்பு உள்ளது. இதேபோன்று, கோவை - 127, ஈரோடு - 59, செங்கல்பட்டு - 56, காஞ்சீபுரம் - 22, திருவள்ளூர் - 27, நாமக்கல் - 43, சேலம் - 41, திருச்சி - 46 , திருப்பூர் -52 பேர் என கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story