பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை
புதுவையில் பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பாகூர்
புதுவையில் பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள் விரிப்பான்கள், உறிஞ்சு குழல் உள்பட 8 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இத்தகைய பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்வது குற்றமாகும்.
பாகூர் கொம்யூனை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத கொம்யூனாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு குழுமம், கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
இந்த நிலையில், சுற்றுச் சூழல் துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் பிள்ளையார்குப்பம் - பின்னாட்சிக்குப்பம் சாலையில் உள்ள தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில், அங்கு தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் உற்பத்தி செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா உத்தரவின்பேரில், அந்த தொழிற் சாலையின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப் பட்டது.
Related Tags :
Next Story