தைப்பூசத்தை முன்னிட்டு தென்மாவட்ட ரெயில்கள் மேல்மருவத்தூரில் நிற்க ஏற்பாடு - தென்னக ரெயில்வே
தைப்பூசத்தை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தைப்பூசத்தை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தென்மாவட்ட ரெயில்கள் வருகிற 13-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 19-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.
அதாவது, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
அதேபோல, ராமேசுவரம்-புவனேசுவர் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-லோகமானிய திலக் குர்லா வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-பனாரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை (மயிலாடுதுறை வழி) வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் 19-ந் தேதி வரை இயக்கப்படும் நாட்களில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story