மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது
x

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் சி.இ. மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் ஜேம்ஸ் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். பள்ளியுடன் சேர்ந்து மாணவ-மாணவிகள் தங்கும் விடுதியும் பள்ளி வளாகத்திலேயே உள்ளது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகையின்போது, பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி மட்டும் தனியாக விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வேளையில் மாணவிகள் விடுதிக்கு சென்ற பள்ளி தாளாளர் ஜேம்ஸ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் சீண்டல்கள் அடிக்கடி தொடர்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தாளாளர் கைது

இந்த நிலையில் அம்மாணவி தனது பாதுகாவலரின் வீட்டுக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பாதுகாவலரிடம் கூறி இருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஜேம்ஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Next Story