காதலன் மீது நடிகை ஜூலி பரபரப்பு புகார்..!


காதலன் மீது நடிகை ஜூலி பரபரப்பு புகார்..!
x
தினத்தந்தி 4 Dec 2021 12:11 PM IST (Updated: 4 Dec 2021 12:11 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஜூலி தனது காதலர் மீது இன்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் நர்ஸ் ஜூலி. அந்த புகழ், அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி  வரை கொண்டு போய் சேர்த்தது. ஒரு நர்ஸ்சாக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே பெரிய அளவில் பிரபலமானார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். பின்னர்  சினிமா படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்தார். அதன்பின்னர், ஜூலி மாடலிங்கில் படு பிசியாகிவிட்டார். ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு படு வேகமாக சமூகவலைத்தளத்தில் பிரபலமானார்.

இந்நிலையில்,  ஜூலி தனது காதலர் மீது இன்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகாரில்,  மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக  நடிகை ஜூலி, சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் மற்றும் பல்சர் பைக் போன்றவற்றை அபகரித்ததாக காதலன் மனிஷ் மீதான புகாரில் ஜூலி தெரிவித்து உள்ளார்.

Next Story