மாநில செய்திகள்

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி...!‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தவர்கள் + "||" + Girlfriend throws acid on boyfriend who lived in Living Together

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி...!‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தவர்கள்

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி...!‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தவர்கள்
கோவை பீளமேடு பகுதியில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்லாமல்  காதலர்கள் ராகேஷ் மற்றும் சுகந்தி ஆகிய இருவரும் ‘லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று காதலன் ராகேஷ் மீது சுகந்தி ஆசிட் வீசி கத்தியால் குத்தியுள்ளார். அது மட்டுமல்லாது தூக்க மாத்திரை சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காதலர்கள் இருவருக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் மீது புகார் கொடுத்த ஜூலி; காதலன் கூறிய தகவல்களால் குழப்பமடைந்த போலீசார்
போலீசார் நடத்திய விசாரணையில் ஜூலியின் காதலன் மனீஷ் கூறிய தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது.