தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 4 Dec 2021 2:54 PM IST (Updated: 4 Dec 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவிலும் கால் தடம் பதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிய மரபணு வரிசை பரிசோதனைக்காக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  எனவும்  கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த  தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128- ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story