டுவிட்டரில் விடுமுறை கேட்ட பிளஸ்-2 மாணவனுக்கு அறிவுரை கூறிய கலெக்டர்


டுவிட்டரில் விடுமுறை கேட்ட பிளஸ்-2 மாணவனுக்கு அறிவுரை கூறிய கலெக்டர்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:07 AM IST (Updated: 5 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

டுவிட்டரில் விடுமுறை கேட்ட பிளஸ்-2 மாணவனுக்கு கலெக்டர் அறிவுரை கூறினார்.

கரூர், 
கரூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று மதியம் 12.30 மணி வரை நீடித்தது. இந்தநிலையில் பிளஸ்-2 மாணவரான ஈஸ்வரமூர்த்தி கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட கலெக்டரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், தற்போது மழை குறைந்துவிட்டது. பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி. நண்பர்களையும் கிளம்ப சொல்லுங்க. நிறைய படிக்க வேண்டி இருக்கு என அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கினார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Next Story