அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து, தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் கார்த்திகை மாதத்தின் அமாவாசையான நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து, தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். அதன் பின்னர் கோவிலில் முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story