‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி: சினிமா தியேட்டர்களில் மீண்டும் கட்டுப்பாடுகளா? அமைச்சர் சாமிநாதன் பதில்


‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி: சினிமா தியேட்டர்களில் மீண்டும் கட்டுப்பாடுகளா? அமைச்சர் சாமிநாதன் பதில்
x
தினத்தந்தி 5 Dec 2021 5:50 AM IST (Updated: 5 Dec 2021 5:50 AM IST)
t-max-icont-min-icon

தியேட்டர்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதை முதல்-அமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

சென்னை, 

சென்னையில் செய்தித்துறை மற்றும் திரைப்பட தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்கவும், அதை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் செயலியை தயாரிக்கும் பணி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் முதல்-அமைச்சருடன் பேசி முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஒமைக்ரான் வைரஸ் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடனும், வல்லுனர்களுடனும் கலந்து பேசி தியேட்டர்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதை முதல்-அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story