சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதுபோல், வெளிமாநிலங்களிலும் கனமழை பெய்வதால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த காரணங்களால் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.150 வரை சென்றது. அதன்பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிலோ ரூ.50 முதல் ரூ.70-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் இன்று சென்னையில் தக்காளியின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளியின் ஒரு கிலோ 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுத் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி மொத்த விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைபோல மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story