பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு


பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 6:48 AM IST (Updated: 6 Dec 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிக வளாகங்கள்,அரசு அலுவலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார்நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story