சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்


சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால்  தனியார் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:03 PM IST (Updated: 6 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

புதுச்சேரி
மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

மாணவர்களின் கட்டாயம்

புதுவையில் பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் கல்வித்துறையால் இயக்கப்படும் மாணவர் சிறப்பு பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை.
இந்தநிலையில்     பள்ளிக் கூடங்களுக்கு வரவேண்டிய மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அதில் பயணித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக லாஸ்பேட்டை பகுதியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளதால் அங்கு செல்லும் பஸ்களில் வழக்கமாக கூட்டம் காணப்படும்.

ஆபத்தான பயணம்

தற்போது மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாதால் மாணவ, மாணவிகளின்பாடு திண்டாட்டமாகி   உள்ளது.     இதனால் லாஸ்பேட்டைக்கு செல்லும் டவுண் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பஸ்களில் உள்ளே இடம் இல்லாததால் படிக்கெட்டில் தொங்கியபடியும், சரக்கு மற்றும் பார்சல்கள் ஏற்ற உதவும் பின்புற ஏணி படியில் நின்றபடியும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இதை        பார்ப்போர் நெஞ்சம் பதைபதைப்பாக உள்ளது. ஓடும் பஸ்சில் இப்படி செல்வதால் திடீர் பிரேக் போடும் போதோ, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதோ இந்த மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. ஆபத்தான வகையில் மாணவர்கள் தொங்கியபடியே பஸ்களில் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பதைபதைக்க வைத்துள்ளது. 

மாணவர் பஸ்

மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற பயணத்தை முடிவுக்கு கொண்டுவர மாணவர் சிறப்பு பஸ்களை விரைந்து இயக்க கல்வித்துறை நடவடிக்கை    எடுக்கவேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story