கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டம்
சாலையை சீரமைக்க கோரி வளர்ச்சி இயக்கத்தினர் கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்
புதுச்சேரி - கடலூர் சாலையில் முதலியார்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்த கனமழையால் அது மேலும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலியார்பேட்டை வளர்ச்சி இயக்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைவர் கணபதி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜ்மோகன், துணை தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கடலூர் சாலை மார்க்கமாக சிறிது தூரம் நடந்து சென்று தட்டு ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்தபடி நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story