கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது வதந்தி அமைச்சர் சக்கரபாணி பேட்டி


கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது வதந்தி அமைச்சர் சக்கரபாணி பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2021 1:13 AM IST (Updated: 7 Dec 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி விலைகள் உயர்வினை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர், 

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காய்கறி விலைகள் உயர்வினை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். குறுவை நெல் சென்ற ஆண்டைவிட கூடுதலாக 3 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தியாகும். திருவாரூர் மாவட்டத்தில் 72 சதவீதம் பேர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். புதிய வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போடும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story