தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்-குழந்தை உயிரிழப்பு


தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்-குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:56 AM IST (Updated: 7 Dec 2021 1:42 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.

கோவை : 

கோவை செட்டி வீதி அருகே, உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்( 38)  இவரது மனைவி  புண்ணியவதி, (32). இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமான இவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டதால், தனக்குத்தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையும் தாயும் மயங்கியுள்ளனர்.


இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெரியகடைவீதி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Next Story