மாநில செய்திகள்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: முதல்-அமைச்சரை சந்திக்க தந்தை லத்தீப் திட்டம் + "||" + Culprits behind my daughters death should be arrested: Fathima Latheef's father all set to meet Stalin

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: முதல்-அமைச்சரை சந்திக்க தந்தை லத்தீப் திட்டம்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: முதல்-அமைச்சரை சந்திக்க தந்தை லத்தீப் திட்டம்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் கோரிக்கை வைத்த பிறகு, பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது .
சென்னை ,

கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதி அறையில் திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மற்ற மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கடந்த ஓராண்டாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக பாத்திமாவின் தந்தை லத்தீப் கொச்சியிலிருந்து சென்னை வந்தார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன்னுடைய மகளின் செல்போனில் குற்றவாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.இது குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாத்திமாவின் தந்தை லத்தீப் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி, தனது மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்திருந்தார். 

அதன்பிறகு டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடமும் கோரிக்கை  வைத்திருந்தார். அதன்பிறகு, பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐ.ஐ.டி.க்கு புதிய இயக்குனர் நியமனம்
சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.