குற்றால அருவிகளில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றால அருவிகளில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 7 Dec 2021 11:08 AM GMT (Updated: 7 Dec 2021 11:08 AM GMT)

குற்றால அருவிகளில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் உற்சாகமாக குளியல் போட்டு செல்வார்கள்.
 
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரம்மியமான சூழல் நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை 2-வது ஆண்டாக தற்போது வரை அமலில் உள்ளது. 

தற்போது குற்றால அருவிகளில் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story