காரைக்காலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


காரைக்காலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x

காரைக்காலில் உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

காரைக்கால்
காரைக்காலில் உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கள்ளக்காதல்

காரைக்கால் இந்திராநகரை சேர்ந்தவர் காஜா. மளிகை கடை தொழிலாளி. இவரது மனைவி விசுவத் நாச்சியாள் (வயது 29). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
காஜாவின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் அபுதாகிர் (30). டிரைவர்.  இவருக்கும், விசுவத் நாச்சியாளுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததை தொடர்ந்து காஜா மற்றும் அவரது உறவினர்கள் விசுவத்நாச்சியாளை கண்டித்தனர்.
இந்தநிலையில் கள்ளக்காதலர்கள் இருவரும், வழக்கமாக சந்தித்துக் கொள்ளும் உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றனர். மாலை வரை விசுவத் நாச்சியாள் வீடு திரும்பாததால் குழந்தைகள் தேடின. 

தூக்கில் தொங்கினர்

அப்போது தான் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று பார்த்தபோது, விசுவத்நாச்சியாள், அபுதாகிர் ஆகிய இருவரும் மின்விசிறியில், ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், விசுவத் நாச்சியாள், தனது வீட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்ற உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், நாங்கள் சேர்ந்து வாழ எதிர்ப்பு உள்ளதால், சாவில் ஒன்றாக இணைகிறோம். முடிந்தால், எங்கள் இருவரையும், ஒரே இடத்தில் புதைத்து விடுங்கள் என எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. 
3 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த சம்பவம் காரைக்கால் பகுதியில்      பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story