கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, சில்லரை வியாபாரத்தில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதனால் வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதைபோல மராட்டியம் முருங்கைக்காய் கிலோ 270 முதல் 300 ரூபாய்க்கும், குஜராத் முருங்கைக்காய் 160 முருங்கைக்காய் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 90, நாட்டுத் தக்காளி கிலோ 95,110 க்கும், வெங்காயம் 30 ,வெண்டைக்காய் 60 க்கும், கேரட் 50/70 க்கும், அவரைக்காய் 90 க்கும், கருவேப்பிலை 1 கட்டு 40 க்கும், பீர்க்கன்க்காய் மற்றும் கோவைக்காய் 60 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story