மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா கடந்த மாதம் அறிவித்தார். ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதிகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவித்துள்ளது. மழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் டிச. 14 முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story