முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் -மனைவி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து


முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் -மனைவி  பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து
x
தினத்தந்தி 8 Dec 2021 1:50 PM IST (Updated: 8 Dec 2021 2:24 PM IST)
t-max-icont-min-icon

முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் -மனைவி பயணம் செய்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காட்டேரி மலைப்பாதையில் சென்ற போது கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.  கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி  உள்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.

அடர்ந்த மேகமூட்டம் காரணமாக வழி தவறி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நேரிட்ட காட்டுப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 

Next Story