மாநில செய்திகள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி ...? பிபின் ராவத் நிலை என்ன? + "||" + 4 killed in Coonoor helicopter crash What is the status of Pipin Rawat?

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி ...? பிபின் ராவத் நிலை என்ன?

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி ...? பிபின் ராவத் நிலை என்ன?
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணம் செய்ததை விமானப் படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
சென்னை,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  காட்டேரி மலைப்பாதையில்  கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.  கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி  உள்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 உடல்கள்  80 சதவீதம்  எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டன; சில உடல்கள் விபத்துநடந்த பகுதியிலுள்ள மலைச்சரிவின் கீழே விழுந்துள்ளன.  

உடல்களை மீட்கவும்,அடையாளங்களை சரிபார்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஹெலிகாப்டர் விபத்து குறித்து 4-வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு
முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசார், விமானப்படை, ராணுவ உயர் அதிகாரிகள் 4-வது நாளாக ஆய்வு நடத்தினர்.
3. இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக மலையாள இயக்குநர் அலி அக்பர் அறிவிப்பு
பிபின் ராவத்தின் மரணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறி, மலையாள இயக்குநர் அலி அக்பர்இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
4. புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர்: உத்தரகாண்ட் அரசு முடிவு
உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. பிபின் ராவத் என்னிடம் தண்ணீர் கேட்டார்...விபத்தை பார்த்தவரின் சாட்சி..!
ஹெலிகாப்டர் விபத்தின் போது பிபின் ராவத்தை உயிருடன் பார்த்ததாக ஒருவர் கூறுகிறார்.