கொலை வழக்கில் விடுதலையான 5 பேருக்கு ஆயுள் தண்டனை


கொலை வழக்கில் விடுதலையான 5 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 Dec 2021 1:13 AM IST (Updated: 9 Dec 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் விடுதலையான 5 பேருக்கு ஆயுள் தண்டனை - அப்பீல் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பச்சைபெருமாள் என்பவர் நிலப்பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி கூடுதல் செசன்சு கோர்ட்டு, வழக்கில் தொடர்புடைய 12 பேரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து பச்சைபெருமாளின் மனைவி திலகவதி, மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

முன்விரோதத்தால் இந்த கொலை நடந்துள்ளது. ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாட்சி மற்றும் வாக்கு மூலங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, 12 பேரை விடுதலை செய்த தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. விடுதலை செய்யப்பட்டவர்களில் முருகேசன், பட்சிகுட்டி, பலவேசராஜ், குலசேகர பாண்டியன், பிளேடு கணேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. வருகிற 31-ந் தேதிக்குள் அனைவரும் சரணடைய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Next Story