போலீசார் தாக்கியதால் இறந்ததாக குற்றச்சாட்டு கல்லூரி மாணவர் உடல் மறுபரிசோதனை
போலீசார் தாக்கியதால் இறந்ததாக குற்றச்சாட்டு கல்லூரி மாணவர் உடல் மறுபரிசோதனை உறவினர்களின் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் நடந்தது.
ராமநாதபுரம்,
போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவரின் உடல், அவரது உறவினர்களின் 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர் சாவு
ராமநாதபுரம் மாவட்டம் நீர்க்கோழியேந்தலை சேர்ந்த லட்சுமணன்-ராமலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டன் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் கடந்த 4-ந் தேதி கீழத்தூவல் காளிகோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், நிற்காமல் சென்றதாக கூறி மணிகண்டனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் திடீரென உயிரிழந்தார். போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் மணிகண்டன் இறந்துள்ளதாகவும், எனவே அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி ராமலட்சுமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஐகோர்ட்டு உத்தரவு
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, “மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். மறுபிரேத பரிசோதனை முடிந்தபின் உடனடியாக உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர்கள் சேக்மன்சூர் (ராமநாதபுரம்), முருகன் (பரமக்குடி) ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள் முத்துமுனீசுவரன், சக்திவேல் ஆகியோர் மறுபிரேத பரிசோதனை செய்ய சென்றனர்.
அப்போது, மணிகண்டன் தரப்பினர், “தங்கள் சார்பில் ஒருவரை உடன் அழைத்து செல்ல வேண்டும். அவர் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்றனர். அதற்கு வருவாய் கோட்டாட்சியர்கள் அனுமதி அளிக்கவில்லை.
வாக்குவாதம்
இதனால் மணிகண்டனின் உறவினர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாலை 4 மணி வரை மறுபிரேத பரிசோதனை செய்யாமல் இழுபறி நீடித்தது. பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் சார்பில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாவட்ட மாஜிஸ்திரேட்டு என்ற அடிப்படையில், மனுதாரர் சார்பில் ஒருவர் செல்ல அனுமதிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் முன்னிலையில் வீடியோ பதிவுடன் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது மாணவர் மணிகண்டன் தரப்பில், திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் உடன் இருந்தார்.
மீண்டும் போராட்டம்
மறுபிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால், மணிகண்டன் சாவுக்கு நீதி வேண்டும், அவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என மீண்டும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்ட தால் உறவினர்களிடம் மணிகண்டன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது சொந்த ஊருக்கு மணிகண்டனின் உடல் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன் சில் கொண்டு செல்லப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story