அண்ணா பல்கலை.யில் விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்பது மாணவர்களும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story