திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 17-ம் தேதி போராட்டம் நடைபெறும் - அதிமுக தலைமை
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 11-ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
இது குறித்து அ.தி.மு.க தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 11.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுடைய மறைவையொட்டி வருகின்ற 17.12.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்று நடைபெறவிருந்த போராட்டம் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story