ஹெலிகாப்டர் விபத்து: 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன


ஹெலிகாப்டர் விபத்து: 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 9 Dec 2021 3:37 PM IST (Updated: 9 Dec 2021 3:37 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில், 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.


நீலகிரி,

முப்படைத்  தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஞ்சிய வீரர்களின் உடல்கள் அடையாளம் காண தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே உறவினர்களிடம்  ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story