பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு வலைவீச்சு


பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:43 AM IST (Updated: 10 Dec 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு வலைவீச்சு.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் மாலை 5 மணிக்கு வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பினை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீண்டநேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர், திருச்சியில் இருந்து பேசியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story