டுவிட்டரில் சர்ச்சை கருத்து: யூடியூப் பிரமுகர் கைது


டுவிட்டரில் சர்ச்சை கருத்து: யூடியூப் பிரமுகர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 1:19 AM IST (Updated: 10 Dec 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

டுவிட்டரில் சர்ச்சை கருத்து: யூடியூப் பிரமுகர் கைது எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு.

மதுரை,

மதுரையை சேர்ந்த யூடியூப் பிரமுகரான மாரிதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. ஆட்சி குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீடு மற்றும் போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story