ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி: நீலகிரி முழுவதும் இன்று கடையடைப்பு
முப்படை தலைமை தளபதி பிபன் ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊட்டியில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி, மளிகை மற்றும் காய்கறி கடை உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சி நடைபெறும் என்று வர்த்தக சங்க தலைவரும், ஓட்டல் சங்க தலைவருமான முகமது ஜாபர் தெரிவித்தார்.
இதேபோல வணிகர் சங்க மாவட்ட தலைவர் பரமேஸ்வரனும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்படும். எனவே வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து ராணுவ அதிகாரிகளின் உயிரிழப்புக்கு துக்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story