பஸ்ஸில் இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்: அதிரவைக்கிறது, கவலையளிக்கிறது - கனிமொழி எம்பி
பஸ்ஸில் இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள், அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தநிலையில் திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பதிவில்,
சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 9, 2021
Related Tags :
Next Story