மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பேருந்து நடத்துனர் மற்றும் டிரைவர் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பேருந்து நடத்துனர் மற்றும் டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 11:03 AM IST (Updated: 10 Dec 2021 12:20 PM IST)
t-max-icont-min-icon

மாணவி காணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் நடத்துனர் சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர் .

விழுப்புரம் ,

விழுப்புரத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் அரசு பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, அந்த மாணவியிடம் நடத்துனர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி காணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவி சென்னையில் இருந்து விழுப்புரம் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றதாகவும், அங்கிருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் வழியில்  நடத்துனர்  சிலம்பரசன் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மாணவி காணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் நடத்துனர்  சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர் . இதை தொடர்ந்து தற்போது அந்த பஸ்சின் டிரைவர் அன்புசெல்வனையும் போலீசார்  கைது செய்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் நடத்துனர் பாலியல் தொல்லை சம்பவத்தில் ஈடுபட்டது  அந்த பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

Next Story