அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து - அரசு உத்தரவு
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் - தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story