முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம்
பாகூரில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பாகூரில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஒமைக்ரான் வைரஸ்
புதுவையில் கொரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அபராதம் விதிப்பு
இந்தநிலையில் பாகூர் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் தொற்று குறைந்து விட்டது என்று கூறி பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். பல முறை எச்சரிக்கை விடுத்தும் பலர் முக கவசம் அணிவதில்லை.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கடைவீதி, பஸ் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் பொது இடங்கள், பஸ்களில் பயணம் செய்யும் போது கண்டிப்பாக முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story